சன்ஸ்கர் கேந்திரா, அகமதாபாத்
அகமதாபாத்தில் உள்ள அருங்காட்சியகம்சன்ஸ்கர் கேந்திரா எனப்படுகின்ற சன்ஸ்கர் அருங்காட்சியகம் இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகமாகும். இது கட்டிடக் கலைஞர் லே கார்பூசியர் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இது ஒரு நகர அருங்காட்சியகம் என்ற பெருமையுடையது. இந்த அருங்காட்சியகத்தில் அகமதாபாத்தின் வரலாறு, கலை, கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலை தொடர்பான கலைப்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படாங் கைட் அருங்காட்சியகம் எனப்படுகின்ற அருங்காட்சியகத்தில் காத்தாடிகள், புகைப்படங்கள் மற்றும் பிற கலைப்பொருட்கள் உள்ளன. பால்டிக்கு அருகிலுள்ள சர்தார் பாலத்தின் மேற்கு எல்லையின் முடிவில் இந்த வளாகம் அமைந்துள்ளது.
Read article